உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெருமாள் கோவிலில் 350 பேருக்கு சமபந்தி விருந்து

பெருமாள் கோவிலில் 350 பேருக்கு சமபந்தி விருந்து

வில்லிவாக்கம்: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுடன், 350 பேருக்கு சமபந்தி விருந்து நடந்தது.முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு நாளை முன்னட்டு, நேற்று பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடந்தது. அந்தவகையில், வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுடன், 350 பேருக்கு சமபந்தி விருந்து நடந்தது. நிகழ்ச்சியை, வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. வெற்றி அழகன், அண்ணா நகர் மண்டல குழுதலைவர் கூ.பி.ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்று துவங்கி வைத்தனர். கோவிலின் தக்கார் குமரன், செயலர் அலுவலர் நித்யகலா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ