மாநகராட்சி கமிஷனராக சரண்யா பொறுப்பேற்பு
ஆவடி:ஆவடி மாநகராட்சி கமிஷனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சரண்யா பொறுப்பேற்றார்.ஆவடி மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய வந்த கந்தசாமி, ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டதையடுத்து, கடலுார் மாவட்ட சப் - கலெக்டராக பணியாற்றி வந்த சரண்யா, ஆவடி மாநகராட்சி புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று, கமிஷனராக சரண்யா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், 2020ம் ஆண்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றவர். ஆவடி மாநகராட்சியின், 10வது கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார்.