மேலும் செய்திகள்
மாயமான 3 பள்ளி மாணவிகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு
03-Nov-2025
புளியந்தோப்பு: தேர்வுக்கு பயந்து, கடத்தல் நாடகமாடிய பள்ளி மாணவியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த நபரின் 15 வயது மகள், அதே பகுதியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சூளை அங்காளம்மன் கோவில் அருகே, நேற்று காலை அழுதபடியே அமர்ந்திருந்தார். அப்பகுதியைச் சேர்ந்த பவானி என்பவர் சிறுமியிடம் விசாரித்தார். பள்ளி சென்றபோது, ஆட்டோவில் வந்த மூன்று பெண்கள் கடத்திச் சென்று விட்டதாகவும், அவர்களிடம் இருந்து தப்பி இங்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோருக்கும், ஓட்டேரி போலீசாருக்கும் பவானி தகவல் தெரிவித்தார். மாணவியை மீட்ட போலீசார், கடத்தப்பட்டதாக சிறுமி சொன்ன இடத்திற்கு சென்று 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாணவி கூறியது பொய் என தெரிய வந்தது. மாணவியையும், அவரது தந்தையையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில், தேர்வுக்கு பயந்து சிலர் கடத்திச் சென்றதாக மாணவி நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து மாணவிக்கு கவுன்சிலிங் அளித்த போலீசார், பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
03-Nov-2025