உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்த செக்யூரிட்டி

அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்த செக்யூரிட்டி

மாம்பலம், துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார், 64. இவர், தி.நகர் சரவணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு சொந்த ஊர் செல்வதாக கூறி, 18,000 ரூபாய் முன்பணம் பெற்று சென்றார். ஆனால், ஊருக்கு செல்லாமல், மது போதையில் அடுக்குமாடி குடியிருப்பிற்கு மீண்டும் வந்து செக்யூரிட்டி அறையில் படுத்து துாங்கினார். இரவு அவரை எழுப்ப முயன்ற போது, அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.இதையடுத்து, 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் சுரேஷ் குமார் உயிரிழந்தது தெரியவந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாம்பலம் போலீசார், அவரது உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி