உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ பணியால் குழாய் உடைப்பு ஓ.எம்.ஆரில் தேங்கியுள்ள கழிவுநீர்

மெட்ரோ பணியால் குழாய் உடைப்பு ஓ.எம்.ஆரில் தேங்கியுள்ள கழிவுநீர்

அடையாறு, மெட்ரோ ரயில் பணியால், பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை முறையாக சரி செய்யாததால், ஓ.எம்.ஆரில் கழிவுநீர் வெளியேறி தேங்கியுள்ளது.ஓ.எம்.ஆரில், இந்திரா நகர், டைடல் பார்க், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் ஆகிய பகுதிகளில், மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதே வழியாக, 2,000 எம்.எம்., கொண்ட கழிவுநீர் குழாய் செல்கிறது.சுரங்கம் அமைத்து நடைபெறும் மெட்ரோ ரயில் பணியால், கழிவுநீர் குழாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டது. இதை, மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் முன்னிலையில் சரி செய்ய வேண்டும்.ஆனால், உரிய கண்காணிப்பு இல்லாததால், குழாய் உடைப்பை முறையாக சீர் செய்யவில்லை. இதனால், கண்ட இடங்களில், மெட்ரோ ரயில் பணிகான இயந்திர நுழைவாயில் வழியாக கழிவுநீர் வெளியேறுகிறது.நேற்று, மத்திய கைலாஷ், இந்திரா நகர் பகுதியில் கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்கியது. இதனால், ஓ.எம்.ஆரில் வாகனங்கள் ஆமை வேகத்தில் சென்றன.ஆறு மாதங்களில், இதே பகுதியில் 20க்கும் மேற்பட்ட முறை கழிவுநீர் வெளியேறி உள்ளது. டைடல் பார்க் சந்திப்பில், சாலை உள்வாங்கி கார் விபத்தில் சிக்கிய சம்பவத்திற்கும், இந்த குழாய் தான் காரணமாக இருந்தது.ஓ.எம்.ஆர்., சென்னையின் முக்கிய சாலையாக உள்ளதால், உடைப்பு ஏற்பட்ட கழிவுநீர் குழாயை சரி செய்து, நீரோட்டத்தை சீராக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ