உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தென் மண்டல பேட்மின்டன் 120 பல்கலை பலப்பரீட்சை

தென் மண்டல பேட்மின்டன் 120 பல்கலை பலப்பரீட்சை

சென்னை, இந்திய பல்கலைக்கழக சங்கத்தின் ஆதரவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், தென் மண்டல ஆடவர் பேட்மின்டன் போட்டி, நேற்று துவங்கியது. 29ம் தேதி வரை நடக்கிறது.போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் நடக்கின்றன.தென் மண்டல அளவில், 120 பல்கலை அணிகள் பங்கேற்று, 'நாக் அவுட்' முறையில் மோதுகின்றன.நேற்று நடந்த ஆட்டங்களில், தெலுங்கானாவின் ஜவஹர்லால் நேரு கல்லுாரி அணி, 3 - 1 என்ற கணக்கில் தமிழகத்தின் அண்ணாமலை பல்கலையையும், தமிழகத்தின் பாரதிதாசன் பல்கலை அணி, 3 - 0 என்ற கணக்கில் கேரளா அப்துல் கலாம் கல்லுாரியையும் வீழ்த்தின.தமிழகத்தின் கிரசன்ட் பல்கலை அணி, 3 - 2 என்ற கணக்கில் ஆந்திராவின் வெங்கடேஸ்வரா பல்கலையையும், தமிழகத்தின் டாக்டர் அம்பேத்கர் பல்கலை அணி, 3 - 1 என்ற கணக்கில் கேரளாவின் மத்திய பல்கலையையும் தோற்கடித்தன.தமிழகத்தின் எம்.எஸ்., பல்கலை அணி, 3 - 0 என்ற கணக்கில் கேரளாவின் கே.எல்.இ., டெக் பல்கலையை வீழ்த்தி வெற்றி பெற்றது.போட்டியில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், ராஜஸ்தானில் நடக்கும் தேசிய பல்கலைக்கு இடையிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை