சென்னை: அகில இந்திய பல்கலை கூட்டமைப்பு ஆதரவுடன், தென்மண்டல பல்கலை இடையில், ஆண்களுக்கான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலை மைதானத்தில் நடந்து வருகிறது. கடந்த 24ல் துவங்கிய இப்போட்டியில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங் களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் காலிறுதி சுற்றுக்கு, தமிழகத்தின் பாரதியார், எஸ்.ஆர்.எம்., ஹிந்துஸ்தான் மற்றும் சென்னை பல்கலை ஆகிய நான்கு பல்கலை அணிகள் முன்னேறின. தவிர, கர்நாடகாவின் ஜெயின், கிறிஸ்ட், விஸ்வேரய்யா ஆகிய மூன்று அணிகளும், கேரளாவின் கோழி க்கோடு பல்கலை அணியும், காலிறுதிக்குள் நுழைந்தன. நேற்று காலை நடந்த காலிறுதி போட்டிகளில், பாரதியார் பல்கலை அணி 61 - 59 என்ற புள்ளிக்கணக்கில், சென்னை பல்கலை அணியை நுாலிழையில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோ ல், ஜெயின், கிறிஸ்ட் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிகளும், தங்களுக்கான காலிறுதி போட்டிகளில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தன. இறுதி சுற்று போட்டி, இன்று நடக்கிறது.