மேலும் செய்திகள்
12,495 மனைகளை 10 நாட்களில் ஆய்வு செய்ய உத்தரவு
04-Mar-2025
சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் முதலாவது முழுமை திட்டத்தின் அடிப்படையில் மணலி புதுநகர் துணை நகர திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. வீட்டு வசதி வாரியம், சி.எம்.டி.ஏ., சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தின. இங்கு வீடு, மனை ஒதுக்கீடு பெற்று தவணையை முழுமையாக செலுத்தி முடித்தவர்களுக்கு, விற்பனை பத்திரம், பட்டா வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இது குறித்து வீட்டுவசதி வாரியம் வெிளியிட்ட அறிவிப்பு: மணலி புதுநகர் திட்டப்பகுதியில், வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து ஒதுக்கீட்டாளர்களுக்கு பட்டா வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.வருவாய் துறை சார்பாக, மணலி பகுதி இரண்டில் உள்ள சிறுவர் மாநகராட்சி பூங்காவில் இன்று துவங்கி, நாளை, நாளை மறுநாள் வரை இந்த முகாம் நடக்க உள்ளது.காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் இந்த முகாமில், ஒதுக்கீட்டு ஆணை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்து பட்டா பெற விண்ணப்பிக்கலாம். பட்டா பெற இப்பகுதியில் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
04-Mar-2025