உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருச்சி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை :பயணியர் நெரிசலை கருத்தில் கொண்டு, திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு வரும் 17ம் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சுதந்திர தினத்தை தொடர்ந்து, சனி, ஞாயிறு விடுமுறை வருவதால், பயணியர் நெரிசலை கருத்தில் கொண்டு, தாம்பரம் - திருச்சி இடையே, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூரில் இருந்து திருச்சிக்கு, நேற்று இரவு 11:10 மணிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதேபோல், திருச்சியில் இருந்து வரும் 17ம் தேதி இரவு 10:50 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், மேல்மருவத்துார் வழியாக இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை