உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை, மதுரையில் இருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்

சென்னை, மதுரையில் இருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்

சென்னை, சென்னை, மதுரையில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதி நகருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.* மதுரையில் இருந்து, வரும் 14ம் தேதி காலை 10:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில், ராஜஸ்தானில் உள்ள பகத் கி கோதி நகரத்திற்கு செல்லும்* பகத் கி கோதி நகரத்தில் இருந்து, வரும் 17ம் தேதி காலை 5:30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாவது நாளில் காலை 8:30 மணிக்கு மதுரை வந்தடையும்* சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 13ம் தேதி இரவு 7:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில், பகல் 12:30 மணிக்கு பகத் கி கோதி செல்லும் * பகத் கி கோதியில் இருந்து, வரும் 16ம் தேதி காலை 5:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11:15 மணிக்கு சென்ட்ரல் வரும். இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி