உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் சேகரிக்க துரைப்பாக்கத்தில் ஸ்பாஞ்ச் பூங்கா

மழைநீர் சேகரிக்க துரைப்பாக்கத்தில் ஸ்பாஞ்ச் பூங்கா

சென்னை;சென்னையில் பாடி, வியாசர்பாடி, துரைப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் மழை நீர் சேகரிப்புக்காக, 'ஸ்பாஞ்ச் பூங்கா' அமைக்கும் பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது. சென்னையில், மழைநீரை சேகரிக்க அரசு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில், பல்வேறு பகுதிகளில் மழை நீர் சேகரிப்புக்காக, 'ஸ்பாஞ்ச் பூங்கா'க்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வும் ஈடுபட்டுள்ளது. இதன்படி, சென்னை பாடி இளங்கோ நகர் பகுதியில், 4.79 ஏக்கர், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில், 4.17 ஏக்கர், துரைப்பாக்கம் தலைமை செயலக காலனி பகுதியில், 5.17 ஏக்கர் பரப்பளவில் மூன்று, 'ஸ்பாஞ்ச் பூங்கா'க்களை அமைக்கப்பட உள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை