உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விளையாட்டு சென்னை கிளப் டென்னிஸ் லீக் பெசன்ட் நகர் அணி அசத்தல்

விளையாட்டு சென்னை கிளப் டென்னிஸ் லீக் பெசன்ட் நகர் அணி அசத்தல்

சென்னை, ன்னையில் கிளப் அணிகளுக்கு இடையே நடந்த டென்னிஸ் லீக் போட்டியில், பெசன்ட் நகர் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் 2வது ஆர்.டபிள்யூ.டி ஓபன் கிளப் டென்னிஸ் போட்டியில், நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில் நடக்கிறது. 'லீக் கம் நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. சென்னை மாவட்ட டென்னிஸ் கிளப் அணிகளுக்கு இடையே நடந்து வரும் டென்னிஸ் லீக் குரூப் ஏ பிரிவில் உள்ள பெசன்ட் நகர் கிளப் 'ஏ' அணி மற்றும் காந்தி நகர் கிளப் 'பி' அணிகள் மோதின. இதில், 30, 35, 45, 55 வயதிற்கு மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒட்டுமொத்தமாக பெசன்ட் நகர் கிளப் அணி 60- - 10 என்ற கணக்கில் வென்றது. அடுத்த நடந்த 'டி' பிரிவு போட்டியில், பிரசிடென்சி கிளப் 69 -- 33 என்ற கணக்கில் ஒய்.எம்.சி.ஏ., கீழ்ப்பாக்கத்தை வென்று அசத்தியது. 'டி' பிரிவு மற்றொரு போட்டியில் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் 61 -- 22 என்ற கணக்கில் ஒய்.எம்.சி.ஏ., கீழ்ப்பாக்கத்தை வென்றது. அதே பிரிவில் நடந்த அடுத்த போட்டியில் பிரசிடென்சி கிளப் 55 -- 41 என்ற கணக்கில், பெசன்ட் நகர் 'பி' கிளப் அணியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை