உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜி.எம்., மாநில செஸ் போட்டி சென்னை, செங்கை அசத்தல்

ஜி.எம்., மாநில செஸ் போட்டி சென்னை, செங்கை அசத்தல்

சென்னை :ஜி.எம்., செஸ் அகாடமி மற்றும் தனலட்சுமி பொறியியல் கல்லுாரி சார்பில், முதலாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி, நேற்று முன்தினம், தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடந்தது.இதில், எட்டு, பத்து, 13 மற்றும் 25 வயது பிரிவில் இருபாலருக்கும், சுவிஸ் அடிப்படையில், பிடே விதிப்படி போட்டிகள் நடத்தப்பட்டன. 500 சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர்.இதில் எட்டு வயது சிறுவர் பிரிவில் செங்கல்பட்டைச் சேர்ந்த வியன், சிறுமியரில் செங்கல்பட்டு ராகவி முதலிடங்களை பிடித்தனர்.அதேபோல், 10 வயது சிறுமியர் பிரிவில் சென்னை அக்ஷரா, சிறுவரில் சென்னை லார்ஷன்; 13 வயதில் சிவகங்கை நிதின் ராமசாமி, காஞ்சிபுரம் அமுதினி ஆகியோர் முதலிடங்களை வென்றனர்.தொடர்ந்து, 25 வயது பிரிவில் பெண்களில் சென்னை ஐஸ்வர்யா, ஆண்களில் நெல்லை மணிகண்டபிரபு ஆகியோர் முதலிடத்தை கைப்பற்றினர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தனலட்சமி கல்லுாரி தலைவர் ராமமூர்த்தி, செங்கல்பட்டு சதுரங்க சங்க செயலர் கிருஷ்ணமூர்த்தி, ஜி.எம்., செஸ் அகாடமி செயலர் மாசிலாமணி பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை