மேலும் செய்திகள்
நங்கநல்லுாரில் பக்தி திருவிழா
03-Oct-2025
நங்கநல்லுார்: நங்கநல்லுார், ராம் நகரில் உள்ள உத்தர குருவாயூரப்பன் கோவிலை, குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம் என்ற அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இக்கோவிலில் விநாயகர், பிரசன்ன வெங்கடேஸ்வரர், பகவதி, அய்யப்பன், சங்கர்ஷணர், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. இக்கோவில் கட்டி, 50 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கடந்தாண்டு 'ஜாக்கி' வைத்து 5 அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டு, திருப்பணி முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், கோவிலை நிர்வகித்து வரும் ஆஸ்திக சமாஜத்தின் மகா சபை கூட்டம், நவ., 2, மாலை 3:30 மணிக்கு, ராம் நகரில் உள்ள ஸ்ரீநாராயண பிரவசன மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதில், அங்கத்தினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். அடையாள அட்டை வைத்துள்ளோருக்கு மட்டுமே அனுமதி என, சமாஜத்தின் கவுரவ செயலர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
03-Oct-2025