உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் இயல், இசை, நாடக விழா துவக்கம்

 ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் இயல், இசை, நாடக விழா துவக்கம்

தி.நகர்: ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் 46வது இயல், இசை, நாடக விழா, கோலாகலமாக துவங்கியது. ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின், 46வது இயல், இசை, நாடக விழா மற்றும் 36வது பரத நாட்டிய விழா, தி.நகர், வாணி மஹாலில் நேற்று துவங்கியது. விழாவில், சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி சத்ய ஞானானந்தா பங்கேற்று, வாய்ப்பாட் டு க் கலைஞர் ருக்மிணி ரமணி; வயலின் கலைஞர் பாஸ்கர்; மிருதங்கம் கலைஞர் முருக பூபதி; பரதநாட்டிய கலைஞர் ரோஜா கண்ணன்; நாடக கலைஞர் தாரிணி கோமல் ஆகியோருக்கு, 'வாணி கலா சுதாகரா' விருது வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து சதுர் லக்ஷனா அகாடமி வழங்கிய, 'கதா மஞ்சரி' என்ற தலைப்பில் ப ரதநாட்டியம் நடைபெற்றது. நிகழ்வில், சுவாமி சத்ய ஞானானந்தா பேசியதாவது: சுவாமி விவேகானந்தர் பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து, தன்னுடைய சொற் பொழிவில் ஒரு தகவல் சொல்லியுள்ளார். அதில், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அந்த தனித்தன்மையில் இருந்து விலகாத வரைக்கும், அந்த நாடு செழிப்பாக இருக்கும். அந்த வகையில், நம் நாட்டிற்கு விவேகானந்தர் சொன்னது ஆன்மிகம். நம் நாட்டின் முதுகெலும்பாக ஆன்மி கம் உள்ளது' என்றார். ஆன்மிகத்தில் இருந்து விலகாத வரைக்கும், நம் நாட்டை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஆன்மிகத்தை கட்டி காப்பாற்றுவது கலைகள் தான். கலைகள் வாயிலாக பாரத பண்பாட்டை காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்வதில், இந்த சபா 80 ஆண்டுகளாக தொண்டு செய்து வருவது பெருமை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி