உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை கல்லுாரி மண்டல கூடைப்பந்தில் சாம்பியன்

எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை கல்லுாரி மண்டல கூடைப்பந்தில் சாம்பியன்

சென்னை;அண்ணா பல்கலை மண்டல அளவில் நடந்த மாணவியருக்கான கூடைப்பந்து போட்டியில், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை கல்லுாரி அணி, சாம்பியன் கோப்பையை வென்றது. அண்ணா பல்கலையின் நான்காவது மண்டல அளவில் மாணவியருக்கான கூடைப்பந்து போட்டி, மேற்கு தாம்பரத்தில் உள்ள பெரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் நேற்று நிறைவடைந்தது. போட்டியில், நான்காவது மண்டலத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சாய்ராம், பிரின்ஸ், பெரி, எம்.ஐ.டி., - தாகூர், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை ஆகிய ஏழு அணிகள் பங்கேற்றன. துவக்கப்போட்டிகள் நாக் அவுட் முறையில் நடந்தன. இதில் அரையிறுதிக்கு எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை, தாகூர், ஸ்ரீசாய்ராம், எம்.ஐ.டி., அணிகள் தகுதி பெற்றன. நேற்று கா லை நடந்த முதல் அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை அணி, 23 - 4 என்ற கணக்கில் தாகூர் கல்லுாரியையும், மற்றொரு அரையிறுதியில், ஸ்ரீ சாய்ராம் கல்லுா ரி, 13 - 4 என்ற கணக்கில் எம்.ஐ.டி., அணியையும் தோற்கடித்தன. இதையடுத்து, விறு விறுப்பான இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை அணி, 19 - 8 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீசாய்ராம் கல்லுாரி அணியை தோற்கடித்து, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. தோல்வியடைந்த ஸ்ரீசாய்ராம் கல்லுாரி அணி இரண்டாவது இடத்தை பெற்றது. முன்னதாக நடந்த மூன்றாம் இடத்திற்கான போட்டியில், தாகூர் பொறியியல் கல்லுாரி அணி, 12 - 11 என்ற கணக்கில் எம்.ஐ.டி., கல்லுாரி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை