உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்

மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்

சென்னை,மதுரையில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில், சென்னையின் சஞ்சய் கணேஷ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழகம் முழுதும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரையில் கிரிக்கெட் மற்றும் தடகள போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பள்ளி மாணவர்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில், சென்னையின் சஞ்சய் கணேஷ் போட்டி துாரத்தை, 13.96 வினாடிகளில் கடந்து, தங்கம் வென்று அசத்தியுள்ளார். தொடர்ந்து, கோவையின் மரிய எபினேஷ் 14.39 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கமும், திருவள்ளூரின் பாவேஷ் ராஜ்குமார் 14.69 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கமும் வென்றனர். இதில், தங்கம் வென்ற சஞ்சய் கணேஷுக்கு, பரிசுத் தொகையாக 1 லட்சம் ரூபாயை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !