உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில கூடைப்பந்து எஸ்.ஆர்.எம்., முதலிடம்

மாநில கூடைப்பந்து எஸ்.ஆர்.எம்., முதலிடம்

சென்னை, போடி கூடைப்பந்தாட்டக் கழகம் சார்பில், மாநில அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டி, தேனி, போடியில் நடந்தது. இதில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கல்லுாரி, கிளப், சங்க அணிகள் பங்கேற்றன. 'லீக்' சுற்றுகளில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி, 65 - 41 என்ற கணக்கில், போடி ஹூப் ஸ்டார் அணியையும், 70 - 36 என்ற கணக்கில் சென்னை எஸ்.பி.ஓ.ஏ., அணியையும் தோற்கடித்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ்.ஆர்.எம்., அணி சென்னை ஜெயராம் அணியை, 82 - 60 என்ற கணக்கிலும், சென்னை எம்.சி.சி.,யை, 95 - 92 என்ற கணக்கிலும் வீழ்த்தி வெற்றி பெற்றது. அனைத்து போட்டிகள் முடிவில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி முதலிடத்தையும், எம்.சி.சி., இரண்டாம் இடத்தையும், வி.கே., ஜெயராமன் அணி மூன்றாம் இடத்தையும் வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை