மாநில கூடைப்பந்து போட்டி ஜவகர் நகர் அணி அபாரம்
சென்னை, மயிலாப்பூரில் உள்ள ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், 19வது ஆண்டிற்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், சென்னையில் நேற்று முன்தினம் துவங்கின.போட்டிகள், பெரியமேடு நேரு விளையாட்டு மைதானத்திலும், தி.நகர், வெங்கட்நராயணா தெருவில் உள்ள மாநகராட்சி மைதானத்திலும் நடக்கின்றன.இதில், ஐ.சி.எப்., - இந்தியன் வங்கி, வருமான வரி, ரைசிங் ஸ்டார் உட்பட ஆண்களில் 72, பெண்களில் 32 அணிகள் என, 104 அணிகள் பங்கேற்றுள்ளன.ஆண்களுக்கான போட்டியில் ஜவகர் நகர் அணி, 91 - 55 என்ற கணக்கில், அம்பத்துார் நகர அணியை தோற்டித்தது. பெண்களுக்கான ஆட்டத்தில், செயின்ட் தாமஸ் அணி, 56 - 41 என்ற கணக்கில் ஷைனி அகாடமியையும், நெக்ஸஸ் அணி, 31 - 18 என்ற கணக்கில் ஐ.சி.எப்., அகாடமியையும் வீழ்த்தின.மற்ற போட்டிகளில், ஏ.டபிள்யூ.எச்.ஓ., அகாடமி அணி, 46 - 19 என்ற கணக்கில் மலர்கள் அணியையும், அட்வென்சர் கிளப், 37 - 29 என்ற கணக்கில், சேவாலய அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றன. போட்டிகள் தொடர்ந்து, 30ம் தேதி வரை நடக்கின்றன.