உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில குத்துச்சண்டை சென்னை அணி சாம்பியன்

மாநில குத்துச்சண்டை சென்னை அணி சாம்பியன்

சென்னை: எஸ்.டி.ஏ.டி. விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்கான, மாநில குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2025 போட்டி, பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், 80க்கும் அதிகமான விடுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், நாக் - அவுட் முறையில் மோதினர். இதன் இறுதி போட்டிகள், நேற்று நடந்தன. அதில், சென்னையைச் சேர்ந்த வீரர்கள், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். கடலுார் மாவட்ட அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற சென்னை மாவட்ட வீரர்கள், அடுத்து நடைபெற உள்ள தேசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை