உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில டேபிள் டென்னிஸ் சென்னை வீரர்கள் அபாரம்

மாநில டேபிள் டென்னிஸ் சென்னை வீரர்கள் அபாரம்

சென்னை, தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி, ஐ.சி.எப்., பகுதியில், 20ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் வரை நடந்தது.போட்டியில், மாநிலம் முழுதும் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஓபன் ஆண்கள் மற்றும் பெண்கள், 11, 13, 15, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.ஓபன் ஆண்கள் மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட இருபிரிவிலும், சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் முதலிடங்களை பிடித்தார்.அதேபோல, 17 வயது பிரிவில், சென்னையைச் சேர்ந்த நிகில்; 15 வயது பிரிவில் சென்னை அக்ஷய் பூஷன்; 13 வயது பிரிவில் சென்னை அஷ்வஜித்; 11 வயதில் சென்னை சித்தார்த் ஆதித்யன் ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர்.பெண்களில் 19 வயதில் சென்னை யாஷினி; 17 வயதில் சென்னை ஷ்ரியா; 15 வயதில் திண்டுக்கல் யோஸ்ரீ; 13 வயதில் தேனி பூஜா; 13 வயதில் நெய்வேலி பவித்ரா, 11 வயது பிரிவில் ஈரோடு பிரத்திகா ஆகியோர், முதலிடத்தை கைப்பற்றினர்.கார்ப்பரேட் பிரிவில் சென்னை பிரசன்னா, மூத்தோர் பிரிவில் ரயில்வே வீரர் வினோத் ஆகியோர் வெற்றி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ