உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிளாம்பாக்கம் நடைமேம்பாலத்துக்கு மீண்டும் நிலம் எடுக்க நடவடிக்கை

 கிளாம்பாக்கம் நடைமேம்பாலத்துக்கு மீண்டும் நிலம் எடுக்க நடவடிக்கை

சென்னை: கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்துக்கு, 34,444 சதுர அடி நிலம் கையகப்படுத்தும் பணிகளை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மீண்டும் துவக்கி உள்ளது. வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், 40 ஏக்கரில், 400 கோடி ரூபாய் செலவில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, 2023 டிச., 30ல் திறக்கப்பட்டது. சென்னையின் பல பகுதிகளில் இருந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லவும், வெளியூரில் இருந்து வருவோர், அங்கிருந்து தங்கள் பகுதிக்கு செல்லவும், மாநகர பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. மெட்ரோ ரயில் சேவை இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் வைத்து, ஊரப்பாக்கம் - - வண்டலுார் இடையே, கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில், புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில், 74 கோடி ரூபாய் மதிப்பில் 1,310 மீட்டர் நீளத்துக்கு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கின. இதற்காக, ரயில் நிலையம், ஜி.எஸ்.டி., சாலை இடையே, 1 ஏக்கர், 45 சென்ட் நிலத்தை கையகப்படுத்த, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. அறிவிப்பை எதிர்த்து தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை ரத்து செய்தது. புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தற்போது நிலம் கையகப்படுத்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நடை மேம்பால பணிகளுக்கு, 34,444 சதுர அடி நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, ஆட்சேபம் எதுவும் இருந்தால் நில உரிமையாளர் தெரிவிக்கலாம் என, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை