உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விடுதியில் துாக்கிட்டு மாணவர் தற்கொலை

விடுதியில் துாக்கிட்டு மாணவர் தற்கொலை

பூந்தமல்லி:மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் கார்த்திக்கேயன், 18. இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, அப்பகுதியில் உள்ள கல்லுாரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.கார்த்திக்கேயன் தவிர்த்து, நண்பர்கள் அனைவரும் வெளியே சென்று மாலையில் அறைக்கு திரும்பினர். அப்போது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.வெகுநேரமாக தட்டப்பட்டும் திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திக்கேயன் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. பூந்தமல்லி போலீசார் உடலை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், சில நாட்களாக கார்த்திக்கேயன் மன உளைச்சலில் இருந்ததாக நண்பர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ