உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவருக்கு கத்திக்குத்து

மாணவருக்கு கத்திக்குத்து

பெரவள்ளூர், கொளத்துாரை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டது. நான்கு மாதத்திற்கு முன் இருவரும் சண்டை போட்டு, பின் சமாதானமாக சென்றனர்.இந்நிலையில் மாணவரில் ஒருவர் பகையை வளர்த்த நிலையில், கூட்டாளிகளை சேர்த்து சக மாணவரின் வீட்டுக்கு சென்று கத்தியால் வெட்டியுள்ளார். மாணவரின் கையில் வெட்டு விழுந்தது. தடுக்க சென்ற மாணவரின் அக்காவுக்கும் வெட்டு விழுந்தது. கூக்குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடவே, தாக்கிய மாணவரும் கூட்டாளிகளும் தப்பியோடினர். காயமடைந்த மாணவரும், அவரது அக்காவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து பெரவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை