மேலும் செய்திகள்
பஸ்சில் இருந்த டிக்கெட் இயந்திரம் திருட்டு
28-Dec-2025
பெண்ணை சீண்டிய வாலிபர் கைது
28-Dec-2025
அம்பத்துார்: ஒன்றரை ஆண்டுகளாக மந்தகதியில் நடந்த ரயில்வே சுரங்கப்பாதை இணைப்பு பணிகள், பண்டிகை காலத்தை முன்னிட்டு திடீரென வேகப்படுத்தப்பட்டுள்ளதால், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். அம்பத்துார் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்தாண்டு துவக்கப்பட்டது. ரயில்வே துறையினர், அவர்களது பணியை ஓரிரு வாரங்களில் முடித்து விட்டனர். ஆனால், சென்னை மாநகராட்சி சார்பில் நடக்கும், ரயில்வே சுரங்கப்பாதையின் இணைப்பு பணிகள் மந்தகதியில் நடந்து வந்தன. ஒன்றரை ஆண்டுகளாக நடக்கும் இந்த பணியில், கே.கே., சாலை பகுதியில் சுரங்கப்பாதை இணைப்பு பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பருவமழை காலம் என்பதால், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், சுரங்கப்பாதை பணிகளுக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டன. புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், அப்பகுதியில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மந்தகதியில் செய்து விட்டு, பருவமழை காலம் மற்றும் பண்டிகை காலத்தில் பணியை துரிதப்படுத்தும் ஒப்பந்ததாரரின் செயல், வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: புத்தாண்டு மற்றும் பொங்கல் என அடுத்தடுத்து வரும் பண்டிகைகளுக்காக, புத்தாடைகள் மற்றும் பலவகையான பொருட்களை, ஒவ்வொருவரும் பல லட்சம் ரூபாயை முதலீடு செய்து இறக்குமதி செய்துள்ளோம். இந்த நேரத்தில், தடுப்புகள் அமைக்கப்பட்டு, பக்கவாட்டில் தகர 'ஷீட்'கள் வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இப்பகுதிக்கு வருவதை தவிர்ப்பர். இதனால், எங்களுக்கு லட்சக்கணக்கில் பொருளாதார இழப்பு ஏற்படும். பண்டிகை காலம் முடியும் வரை, இப்பணிகளை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
28-Dec-2025
28-Dec-2025