காரில் திடீர் புகை
நந்தம்பாக்கம்,:கிண்டியில் இருந்து போரூர் நோக்கி, நேற்று மாலை, கால் டாக்ஸி கார் சென்று கொண்டிருந்தது. மணப்பாக்கம் அருகில் சென்ற போது, காரில் இருந்து திடீரென புகை வந்தது.ஓட்டுநர், காரை சாலை ஓரம் நிறுத்தினார். காரில் இருந்த பயணியரும்ம் உடனே வெளியேறினர்.போக்குவரத்து போலீசார், அப்பகுதிவாசிகள் உதவியுடன், தண்ணீர் ஊற்றி காரில் இருந்து வந்த புகையை அணைத்தனர். இதையடுத்து, 15 நிமிடத்திற்கு பின் கார் அங்கிருந்து சென்றது.இதனால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.