உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மோசமான ரயில்வே சாலை வில்லிவாக்கத்தில் அவதி

மோசமான ரயில்வே சாலை வில்லிவாக்கத்தில் அவதி

வில்லிவாக்கம், ஏற்கனவே சேதமடைந்த ரயில்வே சர்வீஸ் சாலை, தொடர் மழையால் மேலும் படுமோசமானதால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டு, வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ரயில்வே சாலை உள்ளது. மத்திய அரசின் ரயில்வேக்கு சொந்தமான இந்த சாலையின் ஒரு பகுதியில், வில்லிவாக்கம் சந்தை செயல்படுகிறது. இந்த சாலை, குறைந்தபட்ச பராமரிப்பு கூட இல்லாமல், படுமோசமான நிலையில் காட்சியளிக்கிறது. ஏற்கனவே பல்லாங்குழியான இந்த சாலையில், ஒவ்வொரு மழைக்கும் பகுதிவாசிகள் அவதிப்படுவது வழக்கம்.தற்போது, பருவமழை துவங்கியுள்ள நிலையில், மழைநீர் தேங்கி, மீண்டும் இந்த சாலை படுமோசமாக காட்சி அளிக்கிறது.இதனால், அவ்வழியாக செல்வோர் தினமும் விபத்தில் சிக்கி வருகின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை