உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தெறி பட துணை நடிகர் உயிரிழப்பு

தெறி பட துணை நடிகர் உயிரிழப்பு

புதுவண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகர், 6வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன், 42; திருமணமாகவில்லை. இவர், விக்ரம் வேதா, மெர்சல், பிகில், தெறி, புதுப்பேட்டை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.குறிப்பாக தெறி திரைப்படத்தில், தவறாக 'ரைம்ஸ்' பாடி அடி வாங்குவது போல நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். கடந்த இரு மாதங்களாக, உடல்நலம் பாதித்து அவதிப்பட்டார்.மஞ்சள் காமாலை நோய் தீவிரமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை