உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பச்சமலை குன்றை பாதுகாக்க தாசில்தார் ஆய்வுக்கு உத்தரவு

பச்சமலை குன்றை பாதுகாக்க தாசில்தார் ஆய்வுக்கு உத்தரவு

சென்னை, நாகல்கேணியைச் சேர்ந்த, ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:தாம்பரம் அருகில் கடப்பேரி கிராமத்தில், பச்சமலை குன்று உள்ளது. இங்கு, சிவன் கோவிலும் உள்ளது. தொல்லியல் துறையால், புராதன பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பச்ச மலையில் சட்ட விரோதமாக மண் எடுக்கப்படுகிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தொல்லியல் துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகி, ''தொல்லியல் துறையிடம் இருந்து கலெக்டருக்கு வந்த கடிதத்தின் அடிப்படையில், நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, தாசில்தாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. அங்கு, சட்டவிரோத செயல்கள் நடப்பது கண்டறியப்பட்டால், நான்கு வாரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, இடம் மீட்கப்படும்,'' என்றார்.இதை பதிவு செய்து, வழக்கை முடித்து வைத்து, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை