உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நோய் பரவும் இடமாக மாறிய தாசில்தார் அலுவலக கழிப்பறை

நோய் பரவும் இடமாக மாறிய தாசில்தார் அலுவலக கழிப்பறை

சேத்துப்பட்டு, எழும்பூர் தாசில்தார் அலுவலகம், நோய் பரவும் இடமாக மாறியுள்ளதாக, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.சென்னை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் எழும்பூர், பெரம்பூர், அமைந்தகரை, சோழிங்கநல்லுார், மயிலாப்பூர் என, மொத்தம் 16 தாசில்தார் அலுவலகங்கள் செயல்படுகின்றன.இதில், எழும்பூர் தாசில்தார் அலுவலகம், சேத்துப்பட்டு, மேயர் ராமநாதன் சாலையில் அமைந்துள்ளது.இங்கு தாசில்தார், தனி தாசில்தார் மற்றும் நில அளவை பிரிவு, இ- சேவை, ஆதார் சேவை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்படுகின்றன.அதிகாரிகள் உட்பட இங்கு, ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு, நாள்தோறும் பட்டா மாறுதல், ஜாதி, வருமான சான்றுகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக, ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இங்குள்ள பொது கழிப்பறை முறையான பராமரிப்பின்றி, மோசமான நிலையில் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது.கழிப்பறையை பயன்படுத்த செல்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு, மோசமான நிலையில் உள்ளது. இதனால், தாசில்தார் அலுவலகத்திற்கு வருவோர், கடும் அவதிப்படுகின்றனர். சிலர் கழிப்பறையை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து, சுகாதார சீர்கேட்டில் உள்ள கழிப்பறையை ஆய்வு செய்து, கழிப்பறையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை