உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2 ஆண்டாக பெயர் பலகையை மாற்றாத தாம்பரம் மாநகராட்சி

2 ஆண்டாக பெயர் பலகையை மாற்றாத தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம், தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகள், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை பேருராட்சிகள் என, 10 உள்ளாட்சிகளை இணைத்து, 2021, நவம்பரில், தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.மாநகராட்சியாக உயர்த்தப்பட்டு இரண்டாண்டுகள் ஆகியும், 70 வார்டுகளில் உள்ள தெரு பலகைகளை மாற்றவில்லை.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நகராட்சி, பேரூராட்சியின் போது வைக்கப்பட்ட பழைய பலகைகளே, பல பகுதிகளில் காணப்படுகின்றன. பல தெருக்களில் பழைய பலகைகள்கூட இல்லை. சில தெருக்களில் உடைந்து கிடக்கின்றன.மாநகராட்சி நிர்வாகம், இவ்விஷயத்தில் முன்னுரிமை கொடுத்து, தெரு பெயர் பலகைகளை மாற்றியமைக்க வேண்டும். அதில் மண்டலம், வார்டு உள்ளிட்ட விபரங்களையும் குறிப்பிட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி