3 ஆண்டில் வருவாய் 84 சதவீதம் உயர்ந்தும் தாம்பரம் முனையம் மேம்பாடு பெப்பே
சென்னை,:சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் முனையங்களில் இடநெருக்கடி ஏற்படுவதால், தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.தாம்பரம், பெருங்களத்துார், வண்டலுார், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிவாசிகள், தாம்பரம் ரயில் முனையத்தை, அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், இங்கு வந்து செல்லும் தினசரி பயணியரின் எண்ணிக்கை, 2.30 லட்சத்தை தாண்டியுள்ளது.இருப்பினும், பயணியருக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் மேம்படுத்தப்படவில்லை என, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறியதாவது:தாம்பரம் ரயில் நிலையத்தில், பயணியர் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வருவாயும் அதிகரித்துள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில், 84 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால், இந்த ரயில் நிலையத்தில், இன்னும் போதிய அடிப்படை வசதிகள் அமைக்கப்படவில்லை.காத்திருப்பு அறைகள், வீல் ஷேர் வசதி இல்லை. இரண்டு ஆண்டுகளாக, இங்கு நடைமேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது.எனவே, இந்த ரயில் நிலையத்தில், உடனடியாக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தாம்பரம் மூன்றாவது ரயில் முனையத்தில், தனியார் மற்றும் ரயில்வே பங்களிப்போடு, 700 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வாரியத்தின் ஒப்புதல் பெற்று, அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.- தெற்கு ரயில்வே அதிகாரிகள்.
ஆண்டு பயணியர் பிரிவு வருவாய் (ரூ.கோடியில்)
2020 - 21 36.572021 - 22 100.702022 - 23 141.492023 - 24 1772024 - 25 பிப்., 5 வரை 184.32