தமிழ்நாடு டிராகன்ஸ் ஹாக்கி அணி அறிமுகம்
சென்னை, ஏழு ஆண்டுகளுக்கு பின், 'ஹாக்கி இந்தியா லீக்' தொடர் ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களில் வரும் 28ம் தேதி துவங்குகிறது.இப்போட்டியில் 'தமிழ்நாடு டிராகன்ஸ்' என்ற புது அணியின் அறிமுக விழா, தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில், நேற்று முன்தினம் மாலை நடந்தது. நிகழ்வில், அணியின் 'லோகோ, ஜெர்சி' வெளியிடப்பட்டது.இது குறித்து தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவரும், ஹாக்கி இந்தியா பொருளாளருமான சேகர் மனோகரன் பேசியதாவது:முதலில் ஹாக்கி, 'லீக்' தான் துவங்கியது. அதை தொடர்ந்துதான், ஐ.பி.எல்., - ப்ரோ கபடி போன்றவை வந்தது. ஹாக்கியில், உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.தமிழகத்தில் இருந்து நிறைய வீரர்களை உருவாக்கி, அடிமட்ட அளவில் தகுதியுள்ள வீரர்களை தேர்வு செய்து, அவர்களை தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், தமிழ்நாடு டிராகன்ஸ் அணி உரிமையாளர் ஜோஸ் சால்ஸ் மார்ட்டின் மற்றும் அணியின் பயிற்சியாளர்கள், வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.