உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய சீனியர் ஹாக்கி காலிறுதியில் இன்று தமிழகம் - உ.பி., மோதல்

தேசிய சீனியர் ஹாக்கி காலிறுதியில் இன்று தமிழகம் - உ.பி., மோதல்

சென்னை:சென்னையில் நடந்து வரும், தேசிய சீனியர் ஹாக்கியில் இன்றைய காலிறுதி ஆட்டத்தில், தமிழகம் மற்றும் உ.பி., மாநில அணிகள் எதிர்கொள்கின்றன.ஹாக்கி இந்தியா சீனியர் ஆடவர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில், கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. போட்டியில் தமிழகம் உட்பட மொத்தம், 31 அணிகள், எட்டு பிரிவுகளாக பிரித்து மோதின.நேற்று முன்தினம் வரை நடந்த அனைத்து ஆட்டங்களின் முடிவில், பி, டி, இ, எப், எச், ஆகிய பிரிவில் விளையாடி, ஹரியானா, கர்நாடாக, மணிப்பூர் மற்றும் உத்தர பிரதேச அணிகள், தலா ஒன்பது புள்ளிகள் பெற்று, காலிறுதிக்கு முன்னேறின. அதேபோல், 'சி, ஜி' பிரிவில் தமிழகம், மகாராஷ்டிரா அணிகள் தலா ஏழு புள்ளிகளும், 'ஏ' பிரிவில் பஞ்சாப் ஆறு புள்ளிகள் பெற்று, காலிறுதிக்கு தகுதி பெற்றன. நேற்று ஓய்வு என்பதால் போட்டிகள் நடக்கவில்லை. இன்று காலை, 8:30 மணிக்கு நடக்கும் முதல் காலிறுதியில் பஞ்சாப் - மணிப்பூர் அணிகள் எதிர்கொள்கின்றன.தொடர்ந்து, 10:30 மணிக்கு, ஹரியானா - மகாராஷ்டிரா; மதியம் 2:00 மணிக்கு, தமிழகம் - உத்தரபிரதேசம்; 4:00 மணிக்கு கர்நாடகா - ஓடிசா அணிகளும் மோதுகின்றன.தொடர்ந்து நாளை ஓய்வும், 15ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், 16ம் தேதி இறுதி மற்றும் மூன்றாம் இடத்திற்கான போட்டிகளும் நடக்க உள்ளன.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை