மேலும் செய்திகள்
தரமணியில் நாளை மின் குறைதீர் கூட்டம்
19-Mar-2025
தரமணி, அடையார் மண்டலம், 178வது வார்டு, தரமணி, மஹாத்மா காந்தி நகர், பாரதி நகர், பெரியார் நகர் பகுதியில், 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு, ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகிக்கவில்லை. குறைவாக வரும் குடிநீரும் துர்நாற்றத்துடன், சுகாதார சீர்கேடாக வருவதாக கூறி, நேற்று அப்பகுதிவாசிகள் தரமணி பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.கலங்கலாக, துர்நாற்றம் வீசிய குடிநீரை பிடித்து வந்து, அதிகாரிகளிடம் காட்டினர். தரமணி போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள், அவர்களிடம் பேச்சு நடத்தினர்.ஆங்காங்கே குழாய் இணைப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதால், முறையாக குடிநீர் வினியோகிக்க முடியவில்லை. இரண்டு நாளில் வினியோகம் சீராகும் என, அதிகாரிகள் கூறியதையடுத்து, மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.அப்பகுதிவாசிகள் கூறியதாவது:ஒரு மாதமாக, குறைந்த அளவே குடிநீர் வருகிறது. அதுவும், செம்மண் நிறத்தில், துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் சுகாதாரமாக இல்லாததால், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.இதனால், கேன் குடிநீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
19-Mar-2025