உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டாஸ்மாக் கடை திறப்பு: பொதுமக்கள் எதிர்ப்பு

டாஸ்மாக் கடை திறப்பு: பொதுமக்கள் எதிர்ப்பு

திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல் அடுத்து அன்னனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் கடந்த 17ம் தேதி புதியதாக டாஸ்மாக் கடை (எண்-9134) திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை கடையை திறக்க டாஸ்மாக் கடை ஊழியர் பழனி வந்தார்.அப்போது, சுற்றுப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடையை திறக்க கூடாது என்றுக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். 'டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுகிறோம்' என்று அதிகாரிகள் கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இந்நிலையில், நேற்று இரவு டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க இருப்பதாக வந்த தகவலால், ஏராளமானோர் கடை முன் குவிந்தனர். டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுகிறோம் என்று மீண்டும் அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ