மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
03-Sep-2024
சென்னை, அம்பத்துார் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, அரக்கோணம் மார்க்கமாக சென்ற விரைவு ரயில் மோதி, வாலிபர் ஒருவர் இறந்துள்ளதாக, ஆவடி ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது.போலீசார், அந்த சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவரின் பாக்கெட்டில் இருந்த மொபைல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அம்பத்துார், திருவேங்கடம் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 35, என்பது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Sep-2024