உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவினில் பால் தர பரிசோதனை ரூ.6 கோடிக்கு டெண்டர் கோரல்

ஆவினில் பால் தர பரிசோதனை ரூ.6 கோடிக்கு டெண்டர் கோரல்

சென்னை: மாதவரம் மத்திய பால் பண்ணையில் தினமும் தயாரிக்கப்படும், 4.10 லட்சம் பால் பாக்கெட்டுகளை பரிசோதிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, 5.96 கோடி ரூபாய்க்கு, 'டெண்டர்' அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆவின் வெளியிட்டு உள்ள அறிக்கை: சென்னை மாதவரம் மத்திய பால் பண்ணையில், தினமும் 4.10 லட்சம் பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை பரிசோதித்து, டப்பாக்களில் அடுக்கி குளிரூட்டும் அறையில் வரிசையாக அடுக்குதல் மற்றும் வண்டிகளில் பால் பாக்கெட்டுகளை ஏற்றுதல் உள்ளிட்ட பணிகளை, தினமும் இரு வேளைகள் என, இரண்டு ஆண்டுகளுக்கு மேற்கொள்ள ஒப்பந்தம் அறிவிக்கப்படுகிறது. மொத்தம் 5.96 கோடி ரூபாய் ஒப்பந்த தொகையாகவும், 5.96 லட்சம் ரூபாய் முன்வைப்பு தொகையாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒப்பந்த படிவங்களை http://www.tnters.gov.inஎன்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான முன் கலந்தாய்வு கூட்டம், வரும் 30ம் தேதி காலை 11:30 மணிக்கு, சென்னை, மத்திய பால்பண்ணை அலுவலகத்தில் நடக்கிறது. பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை, அடுத்த மாதம் 24ம் தேதி மதியம் 3:00 மணிக்குள் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான ஒப்பந்தப்புள்ளி அடுத்த மாதம் 25ம் தேதி மதியம் 3:00 மணிக்கு திறக்கப்படும். மேலும் தகவலுக்கு, www.aavin.tn.gov.inஎன்ற இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி