உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 15 ஆண்டாக சென்னை - கடலுார் ரயில் பாதை திட்டம் இலவு காத்த கிளி! மாமல்லை - செங்கை 26 கி.மீ., பாதையாவது அமையுமா?

15 ஆண்டாக சென்னை - கடலுார் ரயில் பாதை திட்டம் இலவு காத்த கிளி! மாமல்லை - செங்கை 26 கி.மீ., பாதையாவது அமையுமா?

இதுகுறித்து, சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது:

உத்தேச ரயில் நிலையங்கள்

பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம், புலியூர், ஈகை, மங்கலம், ருத்திரகோடி (திருக்கழுக்குன்றம்), கீரப்பாக்கம், புல்லேரி, துஞ்சம், நென்மேலி, கீழவேடு, மேலேரிப்பாக்கம், ஆலப்பாக்கம், மேலமையூர்.மாமல்லபுரம் : மாமல்லபுரத்திற்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து, சாலை போக்குவரத்து தான் உள்ளது. ரயில் போக்குவரத்து இல்லை. மெட்ரோ ரயில் திட்டமும் சிறுசேரி வரையே செயல்படுத்தப்படுகிறது. மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணியர் அதிகரிப்பதால், ரயில் போக்குவரத்து இன்றியமையாததாக உள்ளது.அணுசக்தி மின்சாரம் தயாரிக்கும் கல்பாக்கம் அருகில் தான் உள்ளது. இப்பகுதிகள் போக்குவரத்து வளர்ச்சிக்காக, செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரத்திற்கு, புதிய ரயில்பாதை அமைக்கவேண்டும். இதற்கு, வரும் பட்ஜெட்டில், முழு நிதியும் ஒதுக்கவேண்டும்.

உத்தேச ரயில் நிலையங்கள்

பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம், புலியூர், ஈகை, மங்கலம், ருத்திரகோடி (திருக்கழுக்குன்றம்), கீரப்பாக்கம், புல்லேரி, துஞ்சம், நென்மேலி, கீழவேடு, மேலேரிப்பாக்கம், ஆலப்பாக்கம், மேலமையூர்.சென்னை - கடலுார் இடையே, 523 கோடி ரூபாயிலான கடலோர ரயில் பாதை திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று தெரியாமல், 'இலவு காத்த கிளி போல்' 15 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். முதற்கட்டமாக, மாமல்லபுரம் - செங்கல்பட்டு இடையே மட்டுமாவது, ரயில்பாதையை அமைக்க வேண்டுமென பயணியரிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சர்வதேச சுற்றுலா தலமாக மாமல்லபுரம் உள்ளது. இங்குள்ள பல்லவர் கால சிற்பங்கள் உலக பிரசித்தி பெற்றவை. இந்த சுற்றுலா பகுதிக்கு, தற்போது சாலை போக்குவரத்து மட்டுமே உள்ளது. இங்கு, ரயில் போக்குவரத்தும் அவசியமாகிறது. பரிசீலித்த ரயில்வே நிர்வாகம், சென்னை -- கடலுார் இடையே, 180 கி.மீ., துாரம், கடலோர ரயில் பாதை அமைக்க முடிவெடுத்தது.இத்திட்டத்ைத 523.50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த ரயில்வே நிர்வாகம், கடந்த 2007ல் ஒப்புதல் அளித்தது. கள ஆய்விற்காக, 6.66 கோடி ரூபாயும் ஒதுக்கியது.

வழித்தடம்

சென்னை, பெருங்குடியில் உள்ள மேம்பால ரயில் பாதையில் இருந்து, புதிய தரைமட்ட ரயில் பாதையை துவக்கி, மாமல்லபுரம் வழியாக கடலுாருக்கு அமைக்க, முதலில் திட்டமிடப்பட்டது. வருவாய் கருதி, சரக்கு ரயில் இயக்கவும் பரிசீலிக்கப்பட்டது.இதுகுறித்த ஆய்வில், சரக்கு ரயில் இயக்கம் சாத்தியமற்றதாக கண்டறியப்பட்டதால், திட்டம் தவிர்க்கப்பட்டது.மாற்று திட்டமாக, தற்போதைய சென்னை - கன்னியாகுமரி பாதையில், செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக, கடலுாருக்கு ரயில் பாதை அமைக்க, நிர்வாகம் முடிவெடுத்தது.இப்பாதைக்கு நிலம் கையகப்படுத்த, 2011ல் மாமல்லபுரம் -- செங்கல்பட்டு இடையே, செங்கல்பட்டு சாலையின் மேற்கில் அளவிட்டும் கற்கள் நடப்பட்டன.தற்போது, நீண்ட காலமாக முன்னேற்றமின்றி, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரூ.1,000 மட்டுமே

முழு நீள பாதைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டிய சிக்கலால், இத்திட்டத்தை செயல்படுத்தாமல் தவிர்ப்பதாக கூறப்பட்டது. பயணியர் வலியுறுத்தலை தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதாக, மத்திய அரசு மீண்டும் அறிவித்தது.முதலில் 50 கோடி ரூபாய், பின் 25 கோடி ரூபாய் என, நிதி ஒதுக்கியது. கடந்தாண்டு திட்டம் செயல்பாட்டில் உள்ளதை குறிக்கும் வகையில், வெறும், 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது.தொலை துார பாதைக்கே, பல்லாயிரம் கோடி ரூபாயும், படிப்படியாக நிதி ஒதுக்க கால அவகாசமும் தேவைப்படும். இதனால் தாமதம் ஏற்படும். ஆனால், கடலோர புதிய ரயில் பாதையில், செங்கல்பட்டு -- மாமல்லபுரம் இடையே, 26 கி.மீ., குறுகிய துாரமே உள்ளது.

மாநில இணைப்பு

திட்டத்தின் துவக்கமாக, இப்பகுதிக்கு முதலில் ரயில் பாதை அமைத்து, போக்குவரத்து துவக்கலாம். சென்னை -- கன்னியாகுமரி ரயில் பாதையில், செங்கல்பட்டு முக்கிய சந்திப்பாக உள்ளது.மாமல்லபுரம் - செங்கல்பட்டு ரயில் பாதை அமைக்கப்பட்டால், தமிழக தெற்கு, மேற்கு ஆகிய மாவட்டங்கள், கேரள மாநில பகுதிகள், விழுப்புரம், திருச்சி வழியாக இணைக்கப்படும்.செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வழியாக, அரக்கோணத்திற்கு ஏற்கனவே ரயில் பாதை உள்ளதால், மாமல்லபுரத்துடன் ஆந்திரா, கர்நாடகா, பிற வடமாநிலங்களும் இணைக்கப்படும்.செங்கல்பட்டு -- மாமல்லபுரம் பாதை அமைந்தால், மாமல்லபுரத்தில் இருந்து தொலைதுார ரயில்கள், சென்னை கடற்கரை, தாம்பரம் -- மாமல்லபுரம் இடையில், மின்சார ரயில்கள் இயக்கலாம்.எனவே, போக்குவரத்து முக்கியத்துவம் கருதி, மாமல்லபுரம் -- செங்கல்பட்டு இடையே முதற்கட்ட ரயில் பாதையை அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் மத்திய பட்ஜெட்டில், இந்த திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, விரைவாக செயல்படுத்த, தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும்.இதுகுறித்து, சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது:மாமல்லபுரத்திற்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து, சாலை போக்குவரத்து தான் உள்ளது. ரயில் போக்குவரத்து இல்லை. மெட்ரோ ரயில் திட்டமும் சிறுசேரி வரையே செயல்படுத்தப்படுகிறது. மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணியர் அதிகரிப்பதால், ரயில் போக்குவரத்து இன்றியமையாததாக உள்ளது.அணுசக்தி மின்சாரம் தயாரிக்கும் கல்பாக்கம் அருகில் தான் உள்ளது. இப்பகுதிகள் போக்குவரத்து வளர்ச்சிக்காக, செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரத்திற்கு, புதிய ரயில்பாதை அமைக்கவேண்டும். இதற்கு, வரும் பட்ஜெட்டில், முழு நிதியும் ஒதுக்கவேண்டும்.

உத்தேச ரயில் நிலையங்கள்

பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம், புலியூர், ஈகை, மங்கலம், ருத்திரகோடி (திருக்கழுக்குன்றம்), கீரப்பாக்கம், புல்லேரி, துஞ்சம், நென்மேலி, கீழவேடு, மேலேரிப்பாக்கம், ஆலப்பாக்கம், மேலமையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
ஜன 24, 2025 20:16

செங்கல்பட்டு கல்பாக்கம் ரயில் திட்டம் சென்னை - திருச்சி மின்மயமாக்கும் திட்டம் செயல் படுத்தும் போது ரயில்வே கல்பாக்கத்திற்கு பல கட்டுமான பொருட்கள் சென்னை ஹார்பர் லிருந்து கல்பாக்கம் தரை மார்க்கமாக கொண்டு வருவது மிக கடினமாக இருந்தது. ரயில்வே நிர்வாகம் அதை சுட்டி கட்டி ரயில் மார்கமாக கொண்டுவருவதில் சிக்கல்கள் இல்லை. அது மட்டு மல்ல பிற்காலத்தில் திருகழுக்குன்றத்திலிருந்து மாமல்லபுரம் நீட்டிப்பு செய்தால் பொதுமக்களுக்கும் உபயோக படும் என்று தெரிவித்திருந்தார்கள். அணுமின் நிர்வாகம் 2 கோடி மட்டும் கொடுத்தால் அவர்கள் பாதையை அமைத்து கொடுப்பதாக கூறியும் இங்கு உயர் நிலையில் இருந்த வேறு மநிலத்தை சேர்ந்த அதிகாரி மனமில்லை மறுப்பு தெரிவித்தார். பொதுவாக மத்திய இந்திய நிருவாகத்தில் தலமை பொறுப்பில் உள்ளவர்கள் மத்திய அரசு செய்தால் என்ன நிருவனங்கள் செய்தால் என்ன அது8 மக்கள் நலனுக்கு என்ற இருப்பவர்கள். சிலர் இதுமாதிரி யில்லம்மால் சொந்த விருப்பு வெறுப்பு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இதே திருவெறும்பூர் BHEL நிர்வாக தலைமிய்ய நிர்வாக இயக்குனராக இருந்த ரயில்வே யிலிருந்து இங்கு மாற்ற பட்டவர் நிர்வாக திறமை மிக்கவர் திரு கிருஷ்னன் அவர்கள். அவர் எண்ணம் நாம் செய்தால் என்ன அரசு செய்தால் என்ன இரண்டும் மக்களுக்காக காக என்ற எண்ணம் உடையவர். அந்த BHEL நகரியம் சுற்றி இருந்த கிராமங்களுக்கு குடி தண்ணீர் வசதியும் தண்ணீர் குழாய் மின் விளக்கு இடுகாடு வசதியும் செய்து கொடுத்தார். அவர் சொல்வதுண்டு நம் சுற்றுப்புறம் சுகாதாரமாய் இருந்தால் நம் மக்களும் சுகாதாரமாக இருப்பார்கள் என்று. தொலை நோக்கு உள்ளவர். தொழிலக மேலாளர் ஒரு கன்னட காரர். இரவில் நடந்து சுற்றி வருவார். அது மட்டுமல்ல அங்கிருந்த ட்டூரிங் சினிமா கொட்டகையில் சில சமயம் நுழைந்து தணிக்கை செய்வார். 2 வது காட்சியை 9:30 கிற்கு ஆரம்பித்து நடு இரவு 12:30 மணிக்கு முடித்து விட வேண்டும் மென்று தொழிலார்கள் அடுத்த நாள் பணிக்கு வர ஏதுவாகும் என்றும் கூறுவார். பொது நோக்கு உள்ளவர்கள் ..


சமீபத்திய செய்தி