உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு காலதாமதமாக ஒப்படைத்த நிறுவனம் ரூ.4.95 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

வீடு காலதாமதமாக ஒப்படைத்த நிறுவனம் ரூ.4.95 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை:'சென்னையில் வீட்டை காலதாமதமாக ஒப்படைத்த கட்டுமான நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, 4.95 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை நங்கநல்லுாரை சேர்ந்த அடேப்பள்ளி ஸ்ரீஜெயந்தி என்பவர் தாக்கல் செய்த மனு:செங்கல்பட்டு மாவட்டம், தையூர் கிராமத்தில், 'அக் ஷயா டுடே' என்ற திட்டத்தில், 3 பெட்ரூம், 2 கார் பார்க்கிங் வசதிகள் கொண்ட வீட்டை, 2012 நவ.,25ல் என் கணவர் முரளி புக் செய்தார். அக் ஷயா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு, 43 லட்சத்து, 76,137 ரூபாயை செலுத்தப்பட்டது. ஆனால், வீட்டை முடித்து பதிவு செய்யும்போது, உறுதி அளித்தபடி, 2 கார் பார்க்கிங் வழங்கவில்லை. அதுபோல, கட்டட நிறைவு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களையும் வழங்கவில்லை. சதுர அடிக்கு, 2,850 ரூபாய் என, 1,308 சதுர அடிக்கு, 41 லட்சத்து, 73,893 ரூபாய் நிர்ணயித்தனர். ஆனால், கூடுதலாக, 2 லட்சத்து, 2,244 ரூபாய் வசூலித்தனர். வீட்டை, 66 மாதம் காலதாமதமாக ஒப்படைத்தனர்.எனவே, நியாயமற்ற வணிக நடவடிக்கை ஈடுபட்ட நிறுவனம், கூடுதலாக வசூலித்த தொகையை வழங்குவதோடு, காலதாமதமாக வீட்டை ஒப்படைத்த, 66 மாதங்களுக்கு, 4 லட்சத்து, 95,000 ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர் டி.ஆர்.சிவக்குமார் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:நியாயமற்ற வணிக நடைமுறையால், மனுதாரரிடம் இருந்து கட்டுமான நிறுவனம், அதிக கட்டணம் வசூலித்துள்ளது. உறுதி அளித்தப்படி, கிளப் ஹவுஸ் போன்ற வசதிகள் தயாராக இல்லை. மேலும், ஆண்டு பராமரிப்பு கட்டணங்களை முன் பணமாக செலுத்தும்படி, மனுதாரர் வற்புறுத்தப்பட்டுள்ளார். காலதாமதமாக வீட்டை ஒப்படைத்தது சேவை குறைபாடுதான். எனவே, காலதாமதமாக வீட்டை ஒப்படைத்து, சேவை குறைபாடு செய்ததுக்கு, 4 லட்சத்து, 95,000 ரூபாயும், வழக்கு செலவாக 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை