உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி 4வது நீச்சல் குளம் ஓ.எம்.ஆரில் அமைகிறது

மாநகராட்சி 4வது நீச்சல் குளம் ஓ.எம்.ஆரில் அமைகிறது

சோழிங்கநல்லுார்,சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், மெரினா, பெரியமேடு மைலேடி பூங்கா, திருவெற்றியூர் ஆகிய இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. அதேபோல், விளையாட்டு துறை சார்பில், முகப்பேர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் நீச்சல் குளங்கள் உள்ளன. நீச்சல் குளங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கான இடம் கிடைப்பதில் உள்ள சிக்கலால், போதிய எண்ணிக்கையில் நீச்சல் குளம் அமைக்கவில்லை. இந்நிலையில், மாநகராட்சியின் நான்காவது நீச்சல் குளம் சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரியில் அமைகிறது. இங்குள்ள, 13,347 சதுர அடி பரப்பு இடத்தில் நீச்சல் குளம் அமைக்க, மாநகராட்சி சார்பில், 1.62 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நீச்சல் குளம், ஒரே நேரத்தில் நான்கு பேர் வரிசையாக பயிற்சி எடுக்கும் வகையில் 25 மீட்டர் நீளத்தில் கட்டமைக்கப்படுகிறது. மேலும், ஆண், பெண்களுக்கு தனித்தனி உடைமாற்றும் அறைகள், கழிப்பறை, காத்திருப்பு அறை, பார்வையாளர்கள் பகுதி, அலுவலகம், மோட்டார் அறை, வாகன நிறுத்தம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. ஜனவரி மாதம் பணி துவங்கும் வகையில், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி