உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இறந்தவர் உடல் தடையை மீறி அடக்கம்

இறந்தவர் உடல் தடையை மீறி அடக்கம்

உத்தண்டி: இறந்தவர் உடலை, தடையை மீறி மயானத்தில் அடக்கம் செய்ததால், உத்தண்டியில் சலசலப்பு ஏற்பட்டது. நைனார் குப்பத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய, அங்குள்ள மயானத்தில் ஏற்பாடு செய்தனர். 'இது எங்கள் இடம், நீதிமன்றம் தடை உத்தரவு உள்ளதால் அடக்கம் செய்ய கூடாது' என, சங்கீதா என்பவர் மயானத்தை பயன்படுத்த விடவில்லை. மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தியும் முடிவு எட்டவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பகுதிமக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், தடையை மீறி அதே மயானத்தில் நாகராஜன் உடலை அடக்கம் செய்தனர். இதனால், சில மணி நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை