உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாவட்ட ஸ்கேட்டிங் சிறுவர்கள் அசத்தல்

மாவட்ட ஸ்கேட்டிங் சிறுவர்கள் அசத்தல்

சென்னை தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கம், மாவட்ட வாரியாக ஸ்கேட்டிங் போட்டியை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகளை நடத்த அறிவுறுத்தியது.அதன்படி, திருவள்ளூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி, அம்பத்துாரை அடுத்த அத்திப்பட்டு, பிர்லா ஓபன் மைன்ட் பள்ளியில், நேற்று முன்தினம் நடந்தது.ஐந்து வயதிற்கு உட்பட்டோர், 5 - -7, 7- - 9, 9 - 11 ஆகிய வயது பிரிவுகளில், இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடந்தன. இதில், 'அட்ஜஸ்டபுள் ஷூ' மற்றும் 'பேன்சி இன்லைன் ஷூ' பிரிவுகளில் முறையே, 100 மீ., மற்றும் 300 மீ., பந்தயங்கள் நடத்தப்பட்டன. போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, 300க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பிர்லா ஓபன் மைன்ட் பள்ளி இயக்குனர் மதுசூதனன், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை