உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழலையர் பள்ளி குழந்தையை கடித்த நாய்

மழலையர் பள்ளி குழந்தையை கடித்த நாய்

ஆவடி, ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவரது மகன் மனிஷ், 5, மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளியில், மழலையர் வகுப்பில் படித்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை, உடற்கல்வி நேரத்தில் மனிஷ் சக மாணவர்களுடன் விளையாடும்போது, பள்ளிக்குள் சுவர் ஏறி குதித்து வந்த தெருநாய் ஒன்று துரத்திச் சென்று கடித்துள்ளது.பெற்றோர், சிறுவனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.நேற்று முன்தினம், அதே பள்ளியில் 2ம் வகுப்பு பயிலும் மாணவரை, நாய் கடித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை