உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காட்சியளித்த அம்மன்? ஓட்டேரியில் சலசலப்பு

காட்சியளித்த அம்மன்? ஓட்டேரியில் சலசலப்பு

சென்னை, ஓட்டேரி அடுத்த கொன்னுார் நெடுஞ்சாலையில், 50 ஆண்டுகள் பழமையான கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், அப்பகுதி மக்கள் தினமும் வழிபடுவது வழக்கம்.கோவிலில், நேற்று மாலை ராகுகால பூஜை செய்து கொண்டிருந்தனர்.அப்போது, அலங்காரம் செய்யப்பட்ட அம்மனின் தலைக்கு மேலே உள்ள ஐந்து தலை நாகத்திற்கும் இடையே, அம்மனின் உருவம் தெரிந்ததாக, தகவல் பரவியது.இதனால், மாலை 4:00 மணி முதல் இரவு வரை அப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க கோவிலில் குவிந்தனர். ஓட்டேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி