உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாயுடன் உறவில் இருந்த நபரை தட்டிக் கேட்டதால் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் கைது

தாயுடன் உறவில் இருந்த நபரை தட்டிக் கேட்டதால் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் கைது

வடபழநி: தாயுடன் உறவில் இருந்த நபரை தட்டி கேட்ட சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கே.கே., நகரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தாய்க்கு ஜூம்பா நடனம் மற்றும் உடற்பயிற்சி கற்றுக் கொடுக்க ராயப்பேட்டை முகமது ஹூசைன் தெருவை சேர்ந்த ெஷரிப், 37 என்பவரை அவரது கணவனர் நியமித்தார். இதில், சிறுமியின் தாய்க்கும் ஜூம்பா நடனம் மாஸ்டருக்கும் உறவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதை சிறுமி தட்டி கேட்டார். இதனால், கோபமடைந்த ெஷரிப், சிறுமியின் கையை முறுக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன், சிறுமியின் பள்ளிக்கு சென்று, சக மாணவர்கள் மத்தியில் சிறுமியை அசிங்கமாக திட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை கடந்த மாதம் 24 ம் தேதி தி.நகர் துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். இந்த புகார் வடபழநி மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, வடபழநி மகளிர் போலீசார் ெஷரிபை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை