பெண்ணின் வீட்டு கதவை இரவில் தட்டிய நபர் கைது
வில்லிவாக்கம், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 26 வயது பெண்ணின் வீட்டு கதவை, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் பலமாக தட்டியுள்ளார். இதனால் பயந்த பெண், கதவை திறக்கவில்லை. இதையடுத்து, கதவை தட்டிய நபர் தகாத வார்த்தையால் பேசி மிரட்டியுள்ளார்.உடனடியாக, அப்பெண் உறவினர்களை மொபைல் போனில் அழைக்கவே, அந்த நபர் அங்கிருந்து தப்பினார். வில்லிவாக்கம் போலீசாரின் விசாரணையில், மதுரையைச் சேர்ந்த மதன், 24, என்பவர் கதவை தட்டியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், பெண் தங்கியிருந்த வீட்டின் மேல் தளத்தில், மதனின் நண்பர் தங்கியிருப்பதாகவும், அவரைப் பார்த்துவிட்டு செல்லும்போது, பெண்ணின் வீட்டு கதவை தட்டியதும் தெரிய வந்தது.