மாணவியை கர்ப்பமாக்கியவர் தலைமறைவு
புளியந்தோப்பு:புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது மாணவியை, ஜெகதீஷ், 22 என்பவர் தினமும் பள்ளிக்கு அழைத்து போய், மாலை வீட்டிற்கு திரும்ப அழைத்து வருவது வழக்கம். சில நாட்களாக மாணவி, உடல்நிலை சரியின்றி வயிற்று வலியால் அவதிப்பட்டார். பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது, மாணவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்த பெற்றோர், கருகலைப்பு செய்ய கோரினர். ஆனால் மருத்துவர்கள் மறுத்த நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். புளியந்தோப்பு காவல் மாவட்ட போலீசார் நடத்திய விசாரணையில், ஜெகதீஷ் மாணவியிடம் அத்துமீறியது தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீஷ் மீது மாணவியின் தாய் புகார் அளித்தார். இதன்படி, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஜெகதீசை தேடி வருகின்றனர்.