உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில சீனியர் கூடைப்பந்து மினியன்ஸ் அணி அபாரம்

மாநில சீனியர் கூடைப்பந்து மினியன்ஸ் அணி அபாரம்

சென்னை : மாநில சீனியர் கூடைப்பந்து போட்டியில், மினியன்ஸ் அணி, 72 - 39 என்ற புள்ளி கணக்கில் மெட்ராஸ் பிகிள்ஸ் அணியை தோற்கடித்தது. தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், மாநில சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது. போட்டியில், சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட ஆண்களில் 132 அணிகளும் பெண்களில் 56 அணிகளும் என, மொத்தம் 188 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான போட்டியின் வெற்றி - தோல்வி விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டு உள்ளது. நேற்று நடந்த ஆண்களுக்கான 'நாக் அவுட்' போட்டியின் விபரம் : அணிகள் புள்ளிகள் மினியன்ஸ் - மெட்ராஸ் பிகிள்ஸ் 72 - 39 மவுண்ட் பாயிஸ் - வேளச்சேரி வாரியஸ் 45 - 34 அம்பத்துார் - சென்னை துறைமுகம் 54 - 43 மேஜிக் சன்ஸ் - செந்தில் 61 - 49 ஹிந்துஸ்தான் அகாடமி - பிட்ஸ் பி.சி., 57 - 54 ஐ.ஐ.டி., மெட்ராஸ் - டால்பின் பி.சி., 58 - 18 மெட்ராஸ் டோர்னாடோஸ் - ரயில்வே இன்ஸ்டிடியூட் 37 - 34 தமிழ் டைகர்ஸ் - சத்யபாமா 44 - 22 சேலஞ்சர்ஸ் பி.சி., - அருணை பி.சி., 20 - 0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை