உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெயின்டரை தாக்கிய இரு ரவுடிகள் கைது

பெயின்டரை தாக்கிய இரு ரவுடிகள் கைது

டி.பி.,சத்திரம், டி.பி.,சத்திரம், 18வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விஜய், 40; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் மாலை, தன் நண்பர் ரமேஷ் என்பவருடன், அதே பகுதி டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு வந்த பழைய குற்றவாளி கர்ணா, 37, மற்றும் ஆனந்த் ஆகியோர், மது குடிக்க விஜயிடம் பணம் கேட்டனர்.விஜய் மறுக்கவே, கத்தியை காட்டி மிரட்டியதோடு, இருவரையும் தாக்கி, 500 ரூபாய் பணத்தை பறித்து தப்பினர்.டி.பி.,சத்திரம் போலீசார் விசாரித்து, கிழக்கு கிளப் சாலையைச் சேர்ந்த கர்ணா, ஷெனாய் நகர் ஆனந்த், 28, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். கர்ணா மீது, மூன்று கொலை உட்பட 11 வழக்குகளும், ஆனந்த் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு வழக்குகளும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி